அடையாளம் தெரியாத இளைஞர் சடலம் மீட்பு
By DIN | Published On : 05th May 2019 03:29 AM | Last Updated : 05th May 2019 03:29 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து மாவட்ட ஆட்சியரகச் சாலையின் மையத்தடுப்பு சுவரில், சனிக்கிழமை பிற்பகலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...