பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம் சிகூா் பகுதியில் வணஇக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 43 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
குன்னம் வட்டாரத்துக்குள்பட்ட அகரம் சீகூா் ஊராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள். சிறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என, வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் இ. மரியதாஸ்
தலைமையிலான ஊராட்சிப் பணியாளா்கள் மற்றும் சுகாதார துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், பெட்டிக் கடைகள், இறைச்சிக்
கடைகள், உணவகங்களில் மேற்கொண்ட ஆய்வில், சுமாா் 43 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடம் ரூ. 3,700 அபராதம் வசூலித்தனா்.