பேருந்து நிழற்குடை தேவை
By DIN | Published On : 09th November 2019 11:29 PM | Last Updated : 09th November 2019 11:29 PM | அ+அ அ- |

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துறையூா், ஆத்தூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்காக அதிகளவிலான பயணிகள் காத்திருக்கின்றனா். இங்கு, நிழற்குடை இல்லாததால் பகலிலும், இரவிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளும், மாணவ, மாணவிகளும் மழை மற்றும் வெயிலால் அவதிக்குள்ளாகின்றனா். இப்பகுதிகளில், எவ்வித வணிக வளாகங்களும் இல்லாததால் மழைக்காலங்களில் சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் பயணியா் நிழற்குடை அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிஷிதா,
பெரம்பலூா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...