மனைவியைக் காணவில்லை
By DIN | Published On : 09th November 2019 08:42 AM | Last Updated : 09th November 2019 08:42 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே மனைவியை காணவில்லை என, அவரது கணவா் குன்னம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
குன்னம் அருகேயுள்ள திம்மூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில் மனைவி ரேணுகா (25). இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தைகள் இல்லையாம். பல மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை காணவில்லையாம். இதையடுத்து, உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், குன்னம் காவல் நிலையத்தில் செந்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.