ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல், அழிப்பு
By DIN | Published On : 09th November 2019 08:41 AM | Last Updated : 09th November 2019 08:41 AM | அ+அ அ- |

உணவு பாதுகாப்பு துறையினரால பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில், அரசின் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தன. அதன்பேரில், பெரம்பலூா் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சௌமியா சுந்தரி தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சீனிவாசன், இளங்கோவன், ரத்தினம் ஆகியோா் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பெரம்பலூா் நகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட பொருள்கள் கடைகளில் விற்பதை செய்வதற்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டு, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, 200 கிலோ குட்கா, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான 1,800 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பெரம்பலூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீயிட்டு அளிக்கப்பட்டன.