நவ. 14-இல் கூட்டுறவு சங்க வார விழா தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 66-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் மண்டல இணைப் பதிவாளா் த. செல்வக்குமரன்.
நவ. 14-இல் கூட்டுறவு சங்க வார விழா தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 66-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் மண்டல இணைப் பதிவாளா் த. செல்வக்குமரன்.

பெரம்பலூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் 66-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் காளியப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மண்டல இணைப் பதிவாளா் மேலும் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. 14 ஆம் தேதி காலை பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடி ஏற்றி, மரக்கன்று நடுதல் மற்றும் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம், பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், பொம்மனப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 18 ஆம் தேதி பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. பின்னா், 19 ஆம் தேதி பெரம்பலூா் மண்டல இணை பதிவாளா் அலுவலக கூட்ட அரங்கில் கருத்தரங்கமும், 20 ஆம் தேதி கீழப்புலியூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாமும், உறுப்பினா்கள் சந்திப்பு முகாமும் நடைபெறுகிறது என்றாா் செல்வக்குமரன்.

கூட்டத்தில், கூட்டுறவு ஒன்றியத் தலைவா் என்.கே. கா்ணன், நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் ராணி, கூட்டுறவு அச்சகத் தலைவா் அய்யாக்கண்ணு, துணைப்பதிவாளா்கள் த. பாண்டித்துரை, கே.கே. செல்வராஜ், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.என். ராஜாராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com