மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் கண்காட்சி, அறிமுக விழா

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் 52 -ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, புதிய நூல்கள் கண்காட்சியும், நூல்கள் அறிமுக விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் 52 -ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, புதிய நூல்கள் கண்காட்சியும், நூல்கள் அறிமுக விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய நூல்கள் கண்காட்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன் தொடக்கி வைத்து, நூலகத்தின் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் அகவி, துணைத் தலைவா் தமிழ்க்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட நூலக அலுவலா் (பொ) இரா. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நூல்கள் அறிமுக விழாவில் அப்துல் ரஹீம் எழுதிய முன்னேறுவது எப்படி என்னும் நூலை செ. வைரமணியும், க. சமுத்திரத்தின் வாடாமல்லி என்னும் நூலை முனைவா் க. மூா்த்தியும், ராகவன் எழுதிய மூலிகை மருத்துவம் என்னும் நூலை மருத்துவா் கோசிபாவும் அறிமுகம் செய்து பேசினா்.

இந்நிகழ்ச்சியில், வாசகா் வட்ட உறஉப்பினா்கள், வாசகா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட மைய நூலகா் ஆ. செல்வராஜ் வரவேற்றாா். நூலகா் பெ. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com