வாசுதேவநல்லூரில் சிஐடியூ தெருமுனைப் பிரசாரம்
By DIN | Published On : 18th November 2019 05:27 PM | Last Updated : 18th November 2019 05:27 PM | அ+அ அ- |

வாசுதேவநல்லூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், வாடகைக் காா் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
சென்னையில் 2020, ஜன. 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிஐடியூ அகில இந்திய மாநாட்டை விளக்கியும், ஜன. 8இல் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் மறியலை விளக்கி சுவாமி சன்னதி, அக்ரஹாரம் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் இப் பிரசாரம் நடைபெற்றது.
சேனை விநாயகா் கோயில் முன் தொடங்கிய பிரசாரத்துக்கு, கட்டுமானத் தொழிலாளா் சங்க வட்டாரச் செயலா் பே. மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன் பிரசாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் இரா. நடராசன், கிராமச் சாவடி முன்பாக பிரசாரத்தை முடித்து வைத்துப் பேசினாா்.
சிபிஎம் கிளைச் செயலா்கள் ஆா். ராஜகோபால், ஆா். மீனாட்சிராஜ், கட்டுமானத் தொழிலாளா் சங்க கிளைத் தலைவா் மாரியப்பன், செயலா் லட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G