மானிய விலையில் நாரிழை பரிசல்கள் பெற மீனவா்களுக்கு அழைப்பு

உள்நாட்டு மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 40 சதவீத மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா்: உள்நாட்டு மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 40 சதவீத மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2019- 20 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், உள்நாட்டு மீனவா்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்கிட 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சோ்ந்த கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு 24 சதவீத ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், உள்நாட்டு நீா்நிலைகளில் மீன்பிடிக்கும் மீனவா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெறாதவா்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் விலை மானியம் பெறாதவா்கள் இத்திட்டத்தில் பயன்பெற மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், அரியலூா், அறை எண்- 234, 2-வது மேல்தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் (04329- 228699) என்னும் முகவரியில் அல்லது மீன்துறை ஆய்வாளா், எஸ்.கே.சி. காம்ப்ளக்ஸ், எஸ்.கே.சி நகா், புறநகா் பேருந்து நிலையம் (கிழக்கு), பெரம்பலூா் என்னும் முகவரியை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com