கைவிடப்பட்டபச்சிளம் குழந்தை மீட்பு
By DIN | Published On : 11th September 2019 08:47 AM | Last Updated : 11th September 2019 08:47 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் குழந்தை ஒன்று முள்புதரிலிருந்து செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் - அய்யலூர் சாலையில் உள்ள முள்புதர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன, ஆண் குழந்தை ஒன்று சாக்கு மூட்டையில் கட்டி தூக்கி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.