மழை வேண்டி பிரம்மரிஷி மலையில் கோ பூஜை
By DIN | Published On : 11th September 2019 08:46 AM | Last Updated : 11th September 2019 08:46 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மழை பெய்ய வேண்டியும், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும், மனிதர்களிடம் ஜீவகாருண்ய சிந்தனையும், தர்ம சிந்தனையும் மென்மேலும் ஓங்கி வளரவும் வேண்டி கோ பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவருமான ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில் ரோகிணி மாதாஜி, ராதா மாதாஜி, சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திட்டக்குடியைச் சேர்ந்த அருந்ததி கோ பூஜை குழுவினர் மற்றும் பெரம்பலூர் எளம்பலூர் ஆன்மிக மெய்யன்பர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி சாதுக்கள், சிவனடியார்கள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.