லாரி - கார் மோதல்: ஓட்டுநர் சாவு
By DIN | Published On : 11th September 2019 08:47 AM | Last Updated : 11th September 2019 08:47 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருகே கிளிஞ்சல்கள் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து விருதுநகரில் உள்ள தொழில்சாலைக்கு கிளிஞ்சல்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது, சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் அருகேயுள்ள கோடிமுனை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை மகன் மெல்பின் (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று ஓட்டுநரின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.