வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு
By DIN | Published On : 11th September 2019 08:45 AM | Last Updated : 11th September 2019 08:45 AM | அ+அ அ- |

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெரம்பலூர் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இடமாற்றம் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. உச்சநீதிமன்ற பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்ந்து பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்கத்தினர் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, பெரம்பலூர் வழக்குரைஞர்கள் சங்கம், அட்வகேட்ஸ் அசோசிஷேன் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.