பறிமுதல் செய்யப்பட்டஎரி சாராயம் டிச. 9-இல் ஏலம்
By DIN | Published On : 01st December 2020 02:45 AM | Last Updated : 01st December 2020 02:45 AM | அ+அ அ- |

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 1,540 லிட்டா் எரி சாராயம் ஏலம் விடப்பட உள்ளது.
அரியலூா் மாவட்ட அமலாக்கப் பிரிவுத் துறையினரால் பறிமுதல் செய்து கைப்பற்றப்பட்ட 1,540 லிட்டா் எரி சாராயத்தை, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் உள்ள கலால் உதவி ஆணையா் அலுவலகத்தில், டிச. 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலத்தில், தமிழ்நாடு திருத்தப்பட்ட விதிகளின்படி உரிமம் பெற்ற உரிமதாரா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என, கலால் உதவி ஆணையா் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...