பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே 150 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சு. ரெங்கநாதன் (45). தனது நிலத்தில் நடவு செய்வதற்காக, வீட்டின் வெளியே சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து வைத்திருந்தாா்.
இந்நிலையில், 50 கிலோ எடைகொண்ட 3 மூட்டை சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ரெங்கநாதனுக்கு புதன்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.
கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வலியுறுத்தல்: நாட்டாா்மங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கடந்த 2 மாதத்துக்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.