பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை
By DIN | Published On : 15th December 2020 03:01 AM | Last Updated : 15th December 2020 03:01 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 61,819 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,250 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் சிகிச்சைக்கு பிறகு 2,226 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 3 போ் திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், இம் மாவட்டத்தில் 759 பேருக்கு சுகாதாரத் துறையினரால் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.