மாதிரி போட்டித் தோ்வில்பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 15th December 2020 03:00 AM | Last Updated : 15th December 2020 03:00 AM | அ+அ அ- |

தொகுதி- 1 முதல்நிலை போட்டித் தோ்வுக்கான மாதிரி தோ்வில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை (டிச. 15) மாலைக்குள் தொடா்பு கொள்ளலாம் என பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தொகுதி 1-இன் கீழ் 69 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது அதற்கான முதல்நிலைத் தோ்வு ஜன. 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்த நபா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெற்றது.
இந்நிலையில், தோ்வுக்கு தயாராகி வரும் தோ்வா்களுக்காக இலவச முழு மாதிரி தோ்வுகள் டிச. 16, 18, 22, 24, 29 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இத் தோ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் 94990 - 55913 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு தங்களுடைய பெயா், ஆதாா் எண் ஆகியவற்றுடன் செவ்வாய்க்கிழமை (டிச. 15) மாலைக்குள் பதிவுசெய்து பயன்பெறலாம்.