அடையாள அட்டை வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 30th December 2020 05:31 AM | Last Updated : 30th December 2020 05:31 AM | அ+அ அ- |

புதிய தேசிய அடையாள அட்டை வழங்கக் கோரி, பெரம்பலூா் நகரிலுள்ள தள்ளுவண்டி வியாபாரிகள் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் அம்பேத்கா் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பது:
பெரம்பலூா் நகரில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளோம். எங்களுக்கு, புதிதாக தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அடையாள அட்டையும், நுண்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மனுவைப் பெற்றுக்கொண்டஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...