சிறுவாச்சூா், எசனையில் நாளை மின் தடை
By DIN | Published On : 17th February 2020 07:56 AM | Last Updated : 17th February 2020 07:56 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மற்றும் எசனை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூா், அய்யலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், கவுல்பாளையம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், மலையப்பநகா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் அசோக் குமாா் தெரிவித்துள்ளாா்.
இதேபோல, எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமப் பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, அனுக்கூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.