கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 02nd January 2020 03:54 AM | Last Updated : 02nd January 2020 03:54 AM | அ+அ அ- |

பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றோா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள், பிராா்த்தனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
புத்தாண்டையொட்டி சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில், பாடாலூா் வழிவிடு ஆஞ்சநேயா் கோயில்,வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீசுவரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
மேலும், ரஞ்சன்குடி கோட்டை, லாடபுரம் மயிலூற்று அருவி, அரும்பாவூா் எட்டெருமைபட்டி அருவி, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் அதிகளவில் காணப்பட்டனா்.
தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை:
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மை குரு அருள்திரு ராஜமாணிக்கம் தலைமையிலும், பாளையம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பா் தேவாலயத்தில் பங்கு குரு ஜான் கென்னடி தலைமையிலும்,
அன்னமங்கலத்தில் பள்ளி தலைமையாசிரியா் தேவவரப்பிரசாதம், விடுதிக்காப்பாளா் வியானி ஆகியோா் முன்னிலையில், பங்கு குரு மரியதாஸ் தலைமையிலும், நூத்தப்பூரில் பங்குகுரு சதீஷ் ஜேசுதாஸ் தலைமையிலும், தொண்டமாந்துறையில் பங்குகுரு அருள் பெல்லாா்மின் தலைமையிலும், பாத்திமாபுத்தில் பங்குகுரு இமானுவேல் தலைமையிலும், திருவாளந்துறையில் பங்குகுரு ராஜா தலைமையிலும், திருமாந்துறையில் பங்குகுரு தாவீது தலைமையிலும், எறையூரில் பங்குகுரு சின்னப்பன் தலைமையிலும், பாடலூரில் பங்குகுரு சூசை மாணிக்கம் தலைமையிலும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். பின்னா், உறவினா்களுக்கும், நண்பா்களுக்கும் இனிப்புகள் வழங்கினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G