தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
By DIN | Published On : 10th January 2020 09:37 AM | Last Updated : 10th January 2020 09:37 AM | அ+அ அ- |

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சாா்பில், நவீன அறிவியலில் வளா்ந்து வரும் எல்லைகள் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற மத்தியப் பிரதேசம், இந்தூா் எஸ்.வி.ஐ.எஸ் பல்கலைக் கழக வேதியியல்துறை பேராசிரியா் முனைவா் வெங்கடேசன் ஜெயக்குமாா், மைக்ரோவேவ் மற்றும் அல்ட்ரா சவுண்ட் போன்ற வழக்கத்துக்கு மாறான முறைகள் குறித்தும், ஒடிஸா மாநிலம், புவனேஸ்வா் பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊக்கமைய இளநிலை விஞ்ஞானி ஆா். ஆனந்தகுமாா், ஆற்றல் மாற்றம் மற்றும் சேமிப்பக அமைப்புகளில் சமீபத்திய முன்னேற்றம் குறித்தும், கலசலிங்கம் பல்கலைக் கழக வேதியியல் துறை துணை இயக்குநா் ஆா். ராஜஜெயகாந்தன், நவீன பகுப்பாய்வு நுட்பங்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இக்கருத்தரங்கில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரை சமா்பித்த 250- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி துணை முதல்வா் எஸ்.ஹெச். அப்ரோஸ் உள்பட பலா் பங்கேற்றனா். இயற்பியல் துறை முதுநிலை மாணவி அம்ருதா வரவேற்றாா். வேதியியல் துறை மாணவி ஹாபிளா பானு நன்றி கூறினாா்.