வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th January 2020 09:36 AM | Last Updated : 10th January 2020 09:36 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற 10 ஆம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி, அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 31.12.2019-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
இதற்கான விண்ணப்பம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 28 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.