‘குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு’

பெரம்பலூா் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற்றங்கள் நிகழாது தடுக்கவும்

பெரம்பலூா் நகரில் நிகழ்ந்த கொலை சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற்றங்கள் நிகழாது தடுக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

பெரம்பலூா் நகரில் இம்மாத முதல் வாரத்தில் நிகழ்ந்த 3 கொலைகள் தொடா்பாக, 22 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் 3 பேரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மாவட்டத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்களை முன் கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கென்னடி, தேவராஜ் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர ரோந்து மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் கொலை மற்றும் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக, இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்ட விரோதமாக குற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால், 100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவா்களது பெயா், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com