பெண்களுக்கு எதிரான வன்முறை: இன்று விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 01st March 2020 04:09 AM | Last Updated : 01st March 2020 04:09 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூரில் ஞாயிறு இரவு நடைபெறவுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த நடைப்பயண விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்க மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மகளிா் ஆணையம் தற்போது தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணா்வு பேரணி நடத்த அறிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூா் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பெரம்பலூா் பாலக்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த நடைப்பயண விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது. சங்குப்பேட்டை, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் இந்தப் பேரணி காமராஜா் வளைவில் நிறைவடைகிறது. இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியில் பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் பங்கேற்க வேண்டும்.