பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சென்னையில் உள்ள அப்பல்லோ ஹோம் ஹெல்த் கோ் நிறுவனத்துக்கு டி.ஜி.என்.எம் கல்வித் தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இப்பணியிடங்களில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளோா் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்பகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.