பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் ரூ. 11.32 கோடி மது விற்பனை
By DIN | Published On : 17th November 2020 02:25 AM | Last Updated : 17th November 2020 02:25 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாள்களில் ரூ. 11.32 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால், மதுபானக் கடைகளில் வழக்கமான நாள்களை விட அதிகளவில் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் 89 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 13 ஆம் தேதி ரூ. 4,12,42,020-க்கும், 14 ஆம் தேதி ரூ. 4,60,20,730-க்கும், 15 ஆம் தேதி ரூ. 2,59,46,600-க்கும் என மொத்தம் ரூ. 11,32,9,390 மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.