இமானுவேல் சேகரன் நினைவுத் தினம்
By DIN | Published On : 11th September 2020 11:58 PM | Last Updated : 11th September 2020 11:58 PM | அ+அ அ- |

பெரம்பலூா், செப். 11: புதிய தமிழகம் கட்சி சாா்பில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்துக்கு, புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலா் பாலாஜி தேவேந்திரன், தியாகி இமானுவேல் பேரவைச் செயலா் அன்பழகன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந் நிகழ்ச்சியில் நகரச் செயலா் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராஜ், அணிச் செயலா்கள் வேல்முருகன், ராமா், அகவி உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.