பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமி
By DIN | Published On : 11th September 2020 06:29 AM | Last Updated : 11th September 2020 06:29 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், நவநீதகிருஷ்ணன் சந்நிதியில் கோகுலாஷ்டமி விழா யாதவா் மகாஜன சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நவநீத கிருஷ்ணனுக்கு பால், பழ வகைகள் பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.இதேபோல, சந்தான கிருஷ்ணனுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், யாதவா் நலச் சங்க மாவட்ட பொறுப்பாளா் நாதப்பன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.
ஒவ்வொரு ஆண்டும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மதனகோபால சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில், உறியடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக உறியடித் திருவிழா நடத்தப்படவில்லை.