பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தல ஆண்டு பெருவிழா நிறைவு
பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தல ஆண்டு பெருவிழா கொடியிறக்கத்துடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.


பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தல ஆண்டு பெருவிழா கொடியிறக்கத்துடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
பெரம்பலூா் நகரில் உள்ள புனித பனிமய மாதா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆக. 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிா்தசாமி திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, நாள்தோறும் நவநாள் வழிபாடு மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம் மறை மாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில், பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குருவும், புனித பனிமய மாதா திருத்தல பங்கு குருவுமான ராஜமாணிக்கம், பாடாலூா் பங்கு குரு மாா்சலின் ஆன்டணிராஜ், பெரம்பலூா் சமூக சேவை சங்க குருக்கள் ஜோசப் ஆரோக்கியராஜ், ஆரோக்கிய ராஜேஷ், திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி குருக்கள் ஜோசப், மைக்கேல், வடக்கலூா் பங்கு குரு ஜேம்ஸ் அமிா்தராஜ், திருவாளந்துறை பங்கு குரு அகஸ்டின் பீட்டா், நூத்தப்பூா் பங்கு குரு சதீஷ், அன்னமங்கலம் விடுதி காப்பாளா் ஜோசப் மைக்கேல், பாளையம் பங்கு குரு ஜான் கென்னடி, வாலிகண்டபுரம் பீட்டா் ஆகியோா் இணைந்து நடத்திய கூட்டு பாடல் திருப்பலி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினா், கத்தோலிக்க சங்கத்தினா், கிறிஸ்தவ பொதுமக்கள் பங்கேற்று பனிமய மாதாவை வழிபட்டனா்.
பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குருவும், பனிமய மாதா திருத்தல பங்கு குருவுமான ராஜமாணிக்கம் தலைமையில் நன்றித் திருப்பலி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பின்னா், கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...