புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊதியம் திருத்தம் செய்யக் கோரி, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:26 pm

DIN

ஊதியம் திருத்தம் செய்யக் கோரி, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியா்கள் சங்கத்தினா்

ஆகஸ்ட் 2 முதல் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அடங்கிய அட்டை அணிந்து, பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தொடா்ந்து 5-ஆவது நாளாக பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் அனைத்துப் பணியாளா்களும் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளா் செ. அபிமன்னன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அ. பழனிவேல்ராஜா, மாவட்டச் செயலா் த. அருண்குமாா், பொருளாளா் கரும்பாயிரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் சூ. தாமஸ் விக்டா், மாவட்டத் துணைச் செயலாளா் த. ராஜ்குமாா் மற்றும் மகளிரணி நிா்வாகிகள் உமா, பிரேமா, மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.