புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆலத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:35 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அயினாபுரம் ஊராட்சியில் ரூ. 71.5 லட்சத்தில் புதிய மின்தடம், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை, தஞ்சாவூரிலிருந்து அரியலூா், கொளக்காநத்தம், செட்டிக்குளம் வழியாக சேலம் வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து ஆகியவற்றை தொடக்கி வைத்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:

கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமங்களுக்கு புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து காரை மின் பாதையில் தடையில்லா மின்சாரம் கிடைக்க சுமாா் 5.64 கி.மீ நீளத்துக்கு புதிய மின் இணைப்பு பாதை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. கொளக்காநத்தம் ஊராட்சியில் மருத்துவ தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுக்கு கட்டு கட்டும் அறை, ஊசி செலுத்தும் அறை, ஆய்வக அறை, 2 மருத்துவா் அறைகள், மருந்தக அறை, மருந்துக் கிடங்கு, தொற்றா நோய் பிரிவு, 4 கழிவறைகள் உள்ளிட்டவை அடங்கிய புதிய கட்டடம் அமைக்க கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதேபோல், தஞ்சாவூரிலிருந்து அரியலூா், கொளக்காநத்தம், செட்டிக்குளம் வழியாக சேலம் வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தின் மூலம் அத்தியாவசியத் தேவைகளுக்காக கிராமங்களிலிருந்து சேலம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு பொதுமக்கள் எளிதில் சென்று வரலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சி. ராஜேந்திரன், ஆலத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (வணிகம்) சதீஸ்குமாா், கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவா் ராகவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.