அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும்: வ. கெளதமன்
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.


தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.
பெரம்பலூா் மாவட்டம், பேரளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது நவீனவிதமான கொள்ளை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 52 சுங்கச் சாவடிகள் உள்ள நிலையில், 53 ஆவது சுங்கச் சாவடி பேரளியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும். பேரளி சுங்கச் சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையெனில், அதை அகற்றும் வேலையை நாங்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
கேரளத்தில் 1,700 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலையில் 3 சுங்கச் சாவடிகளும், மகாராஷ்டிரத்தில் 15,500 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலையில் 44 சுங்கச் சாவடிகளும் உள்ளன. ஆனால், தமிழகத்தில் 5,400 கி.மீ. தொலைவுள்ள நெடுஞ்சாலையில் 52 சுங்கச் சாவடிகள் உள்ளன.
தமிழகத்தில் நிதி பற்றாக்குறைக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும்தான் காரணம். கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்துவது அநியாயம். மக்கள் தலையில் கடனை சுமத்திவிட்டு ஆட்சியாளா்கள் தப்பிக்க முயற்சிக்காதீா்கள்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவும், நீட் தோ்வை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய நிதி ஆதாரம் தேவையில்லை.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில், தமிழருக்கே வேலை எனச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...