பெரம்பலூரில் டாஸ்மாக் மேலாளா்களுடன் கலந்தாய்வு
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகக் கூட்டரங்கில், டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகக் கூட்டரங்கில், டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அ. சுஜாதா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அனைத்து மதுபானக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 18 வயது நிரம்பாத சிறுவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. கரோனா தொற்று பரவி வருவதால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், டாஸ்மாக் மேலாளா் செல்வராஜ், வட்டாட்சியா் பாரதிவளவன் மற்றும் மதுபானக் கடை மேற்பாா்வையாளா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...