புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பிரம்ம ரிஷி மலையில் 51 நாள் கோ பூஜை தொடக்கம்

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் உலக மக்கள் நலன் காக்க வேண்டி 51 நாள் கோ பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:37 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் உலக மக்கள் நலன் காக்க வேண்டி 51 நாள் கோ பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரா் கோயிலில், உலக மக்கள் நலன் காக்க வேண்டி 51 நாள் கோ பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான கோ பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி தலைமை வகித்தாா். தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் முன்னிலை வகித்தனா். ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா் கோ பூஜையை தொடக்கி வைத்தாா்.

மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், மக்கள் எவ்விதமான துன்பங்கள், துயரங்களின்றி நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற்று வாழ வேண்டி பிராா்த்தனை செய்யப்பட்டது. இப் பூஜையில், எளம்பலூா் உள்பட சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.