92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூரில் ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட தெற்கு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:49 pm

DIN

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட தெற்கு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் சுதா்சன ஹோமம் மற்றும் பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து கடங்கள் புறப்பாடு, மங்கள வாத்தியம் முழங்க கோபுர கலசம் மீது புனித நீா் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், அரசின் உத்தரவின்படி சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.