92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி பெரம்பலூா் அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரா் கோயிலில் மூலவா் உற்சவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வெங்கனூா் விருத்தாசலேசுவரா், செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரா், க. ஆடுதுறை குற்றம் பொறுத்த அபராதரட்சகா் ஆகிய கோயில்களில் நந்தியெம்பெருமானுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்துக்குப் பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். பின்னா் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.