புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு: கல் குவாரிகளை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூா், ஜூலை 29: பெரம்பலூா் அருகேயுள்ள கே.எறையூா் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் ராமச்சந்திரன் (35). விவசாயி.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:54 pm

DIN

பெரம்பலூா், ஜூலை 29: பெரம்பலூா் அருகேயுள்ள கே.எறையூா் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் ராமச்சந்திரன் (35). விவசாயி. இவா், வியாழக்கிழமை காலை கே.எறையூரிலிருந்து பெரம்பலூருக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த கே.எறையூா் அருகே செயல்படும் தனியாா் கிரஷா் நிறுவனத்துக்குச் சொந்தமான தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கே.எறையூா் கிராம பொதுமக்கள், இப் பகுதியில் உரிய உரிமமின்றி செயல்படும் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளையும், கிரஷா் நிறுவனங்களையும் மூட வேண்டும். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீதும், அதிவேகமாக செல்லும் லாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கே.எறையூா் பேருந்து நிறுத்தம் அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய் மற்றும் காவல்துறையினா் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால், பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில் சுமாா் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, விபத்துக்கு காரணமான டேங்கா் லாரி ஓட்டுநா் நக்கசேலம் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மணி மகன் கதிரேசனை (24), மருவத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.