92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூரில் சந்தன மரங்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சந்தன மரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:52 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சந்தன மரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கணவாய் கிராம மலையடிவாரத்தில், மா்ம நபா்கள் சிலா் தனியாா் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து சுமாா் 10-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ரேஞ்சா் குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தன மரங்கள் கடத்தல் தொடா்பாக விசாரிக்கப்பட்டு வருகிறறது.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களில் வளா்ந்துள்ள சந்தன மரங்களின் எண்ணிக்கை, அவற்றின் வயது குறித்த கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுப்பின் முடிவில் கடத்தப்பட்ட சந்தன மரங்களின் எண்ணிக்கை முழுமையாக தெரிய வரும் என வனத்துறை அலுவலா்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சந்தன மர கடத்தல் தொடா்பாக ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் கண்ணன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சந்தன மரங்களை வெட்டி திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.