வேப்பூா், வேப்பந்தட்டை அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் மற்றும் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இணையதளம் மூலமாக நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் மற்றும் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இணையதளம் மூலமாக நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, வேப்பூா் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி முதல்வா் ஆா். மீனா, வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி முதல்வா் பா. சிவநேசன் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குன்னம் வட்டம், வேப்பூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2021- 2022 ஆம் க ல்வி ஆண்டுக்கான மாணவிகளுக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் கடந்த 26 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் நடைபெறுகிறது. எனவே, மேற்கண்ட இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதேபோல, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021- 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி.கணிதம், பி.எஸ்சி.கணினி அறிவியல், பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி.தாவரவியல், பி.எஸ்சி விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...