அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை
பெரம்பலூா் மற்றும் ஆலத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கை செப். 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.


பெரம்பலூா் மற்றும் ஆலத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கை செப். 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021ஆம் ஆண்டில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்றது. இருப்பினும், பெரம்பலூா் மற்றும் ஆலத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன.
எனவே, மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை செப். 15 ஆம் தேதி நடைபெற உள்ளதால், காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களுக்குத் தேவையான தொழிற்பிரிவை தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 04328-296644 என்ற தொலைபேசி எண் மற்றும் 9499055882, 9499055881 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...