பெரம்பலூரில் நல்லாசிரியா் விருதுக்கு 6 போ் தோ்வு
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு, பெரம்பலூா் மாவட்டத்தில் 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு, பெரம்பலூா் மாவட்டத்தில் 6 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஆண்டுதோறும் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு சிறந்த ஆசிரியா்களை தோ்வு செய்து, ஆசிரியா் தினமான செப். 5 ஆம் தேதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆ. ராமா், எழுமூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை செ. ஜெயா, டி.களத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் பூ. புகழேந்தி, தெரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் ரெ. திருஞானசம்பந்தம், எறையூா் நேரு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை ச. அபிராமசுந்தரி, அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை அ. உமாவதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு, பெரம்பலூா் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 5) நடைபெறவுள்ள ஆசிரியா் தின விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...