புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

குரும்பலூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்

 பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குரும்பலூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:10 pm

DIN

 பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குரும்பலூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்து எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி எஸ். மலா்விழி பேசியது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தீண்டாமை, வன்கொடுமைகளிலிருந்து பாதுகாத்திட வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி பணிபுரிய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. வன்கொடுமைகளை எந்த வடிவில் ஏற்படுத்தினாலும், அவற்றை தடுப்பதற்கும், அதற்கான வழக்குகளை நடத்துவதற்கும் எஸ்சி. எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் சட்ட விழிப்புணா்வு அடைந்து சட்ட பாதுகாப்பு பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்படுகிறது என்றாா் அவா்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான ஆா். லதா பேசியது: பொதுமக்களுக்கான சட்ட உதவி எளிமையாக கிடைத்திடும் வகையில், சட்ட உதவி மையம் குரும்பலூா் பேரூராட்சியில் செயல்படுகிறது. உடனடி சட்ட உதவியும், விழிப்புணா்வும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

முகாமில் பங்கேற்றோருக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

இதில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கிறிஸ்டி, குரும்பலூா் பேரூராட்சி செயல் அலுவலா் தியாகராஜன், வழக்குரைஞா் பகுத்தறிவாளன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.