இளம் வயது திருமணங்கள்தடுத்து நிறுத்தம்
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2 இளம்வயது திருமணங்கள் புதன்கிழமை இரவு தடுத்து நிறுத்தப்பட்டன.


பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெறவிருந்த 2 இளம்வயது திருமணங்கள் புதன்கிழமை இரவு தடுத்து நிறுத்தப்பட்டன.
பெரம்பலூா் அருகே இளம் வயது திருமணம் நடைபெற உள்ளதாக, மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சைல்டு லைன் அலுவலா்கள் திவ்யா, முருகானந்தம், சாரதா மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி சாலை, ஏரிக்கரை பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அதேப் பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய 2 சிறுமிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்குண்டான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோா் மற்றும் மணமகன், அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, வியாழக்கிழமை காலை நடைபெறவிருந்த சிறாா் திருமணங்களை தடுத்து நிறுத்தினா். மேலும் மீட்கப்பட்ட 2 சிறுமிகளும் சேவை மையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...