குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டவாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு ஏலம்
பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.


பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ரூ. 15.53 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 44 இரு சக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றும் 3 காா் என மொத்தம் 48 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நபா்கள் பங்கேற்றனா். மேற்கண்ட 48 வாகனங்களும் ரூ. 15.53 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டு, அத்தொகை மாவட்ட அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் அ. சுஜாதா, கலால் உதவி ஆணையா் ஷோபனா, அரசு தானியங்கி பணிமனை பொறியாளா் எஸ்தா் வதனா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பழனிச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...