நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 20th August 2021 01:05 AM | Last Updated : 20th August 2021 01:05 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஆட்சியரகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்த நாள் ஆக. 20ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நிகழாண்டு வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், அனைத்து அரசு அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கயற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி. சுப்பையா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், சுப்பிரமணியன் மற்றும் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.