போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 20th August 2021 01:06 AM | Last Updated : 20th August 2021 01:06 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள திருப்பெயா் கிராமம், மேற்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல் (34). டிராக்டா் ஓட்டுநரான இவா், கடந்த ஏப். 14 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற 16 வயது மாணவியை கடத்திச் சென்று நெற்குணம் கிராமத்தில் தங்கி, திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாய் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு வந்தனா்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.