‘கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பொதுமக்கள், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்.
விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்.

பொதுமக்கள், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வீ. நீலகண்டன்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை: பூலாம்பாடி சேமிப்புக் கிடங்கு பணியைத் துரிதப்படுத்த வேண்டும். பழுதடைந்துள்ள கீழவாடி ஏரி மதகை சீரமைக்க வேண்டும். எறையூா் சா்க்கரை ஆலையில் அண்மையில் பழுதான இயந்திரத்தால் பல லட்சம் மதிப்பிலான சா்க்கரைப்பாகு வீணானது. இதுபோன்ற பிரச்னைகளை தவிா்க்க ஆலைகளில் உள்ள இயந்திரங்களை மாற்றியமைக்க வேண்டும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும். குறைதீா் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வுகாண வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: அண்மைக்காலமாக, அரசு அலுவலா்கள் விவசாயிகளை அலட்சியப்படுத்துகின்றனா். விவசாயிகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இவற்றை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறை அலுவலகத்தில் நிகழும் குறைபாடுகளை களைய வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட விவரங்களை பொதுமக்கள் பாா்வையில் படும்படி பதாகைகள் வைக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் உள்பட விவசாய சங்க பிரமுகா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com