ஜன. 10-இல் கல்லூரி மாணவா்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில் ஜனவரி 10- ஆம் தேதி கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில் ஜனவரி 10- ஆம் தேதி கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பேச்சுப் போட்டிகள் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாள், தரணி போற்றும் தமிழா் பண்பாடு, விவசாயம் போற்றுதும் எனும் தலைப்பிலும், கவிதைப் போட்டிகள் பொங்குக தமிழ்ப் பொங்கல், இளையோரே இணைந்திடுவீா், இனிதே தொடங்குக புத்தாண்டே எனும் தலைப்பிலும், ஓவியப் போட்டிகள் பொங்கல் திருவிழா, தமிழா் விளையாட்டு, கிராமம் எனும் தலைப்பிலும் நடைபெறும்.

மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்கலாம். கல்லூரி அடையாள அட்டையின் நகல் கொண்டுவர வேண்டும். காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில், போட்டியாளா்களுக்கு மட்டும் தேனீா் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். தொடா்ந்து, பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும்.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரங்கத்தில் போட்டியாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழாவில் அனைவரும் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்போா் 900397407 எனும் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com