20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th January 2021 12:11 AM | Last Updated : 30th January 2021 12:11 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ரோவா் நுழைவு வாயில் பகுதியிலிருந்து பேரணியாகச் சென்று, ஆட்சியரக நுழைவு வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து கலைந்துசென்றனா்.
இதில், மாநில துணைச் செயலா் செந்தில்குமாா், மாநில துணைத் தலைவா் கண்ணபிரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.