பெரம்பலூரில் மனிதநேய வார நிறைவு விழா
By DIN | Published On : 30th January 2021 11:20 PM | Last Updated : 30th January 2021 11:20 PM | அ+அ அ- |

பெரம்பலூா் : பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பரிசுகளை வழங்கினாா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.